கிசான் முறைகேடு: வாட்ஸ்அப் மூலம் பொதுமக்கள் தகவல் அனுப்பலாம்: சி.பி.சி.ஐ.டி. அறிவிப்பு

கிசான் முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் 'வாட்ஸ்அ ப்' மூலம் தகவல்களை அனுப்பலாம் என்றும், சரியான தகவல்கள் அனுப்புவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் சிபிசிஐடிபோலீசார் அறிவித்துள்ளனர்.


சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டங்களில் உள்ள .பி.சி.ஐ.டி. போலீசாரால் புலன் விசாரணை நடந்து வருகிறது. சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. தலைமையில் ஐ.ஜி. மற்றும் 2 போலீஸ் சூப்பிரண்டுகள்,6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 18 இன்ஸ்பெக்டர்கள் களப்பணி ஆதரவுடன் ஒரு சிறப்பு புலனாய்வு குழு உருவாக்கப்பட்டு உள்ளது.


வழக்குகளின் புலன் விசாரணையில் இதுவரை 52 பேர் இந்த மோசடியில் கைது செய்யப்பட்டு உள்ளனர். அந்தந்த துறை அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து தகவல்கள் பெறப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்ததிட்டத்தில் பொதுமக்கள், அரசு அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் தகவல் அறிந்தோர் உபயோககரமான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.


தகவல் கொடுப்போரின் தகவலில் உள்ள விவரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு அவர்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படும். சரியான தகவல்கள் அளிப்பவர்களுக்கு பொருத்தமான வெகுமதி வழங்கப்படும். தகவல்களை தொலைபேசி எண் 04428513500, பேக்ஸ்' எண் (தொலைநகல்) 044 28512510, 'வாட்ஸ்அ ப்' எண் 9498181035 ஆகியவை மூலமாகவும், cbcid2020@ gmail.com. Got DLA GOTT சல்முகவரியிலும், சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ளசி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்திலும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!