நிலத்தகராறு :அமைச்சர் கே சி வீரமணி மீது நடவடிக்கை எடுக்க அரசு முன் அனுமதி அவசியம் இல்லை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சுந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான ஏறத்தாழ 7 ஏக்கர் நிலத்தை காட்பாடி சேர்ந்த ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ஆகியோர் குத்தகை பெறுகின்றனர்.


பின்னர்அந்த இடத்தை விற்பனை செய்ய சுந்தரராஜன் முடிவு செய்தபோது ராமமூர்த்தி மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் ஆந்திராவை சேர்ந்த பிரம்மானந்தம்,சத்தியநாராயணா ஆகியோர் இணைந்து வாங்கியுள்ளனர்.


நிலத்தை மேம்படுத்தி கட்டுமான பணிகளை செய்து கொடுப்பதற்காக 65 கோடி ரூபாய் தருவதாக காட்பாடியில் சேர்ந்தவர்களுடன், ஆந்திராவைச் சேர்ந்த இருவர் ஒப்பந்தம் போட்டுள்ளனர் பின்னர் இந்த நிலத்தை ஒரு பகுதியை தமிழக அரசு பொதுப்பணித்துறை ஒப்பந்தகாரர் ஆன சேகர் ரெட்டி வாங்கிய பின்னர், 13 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டு மீதமுள்ள 52 கோடி ரூபாயை தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.


இதில் தமிழக வணிக வரி துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலையிடும் இருப்பதால் அவர் மீதும், சேகர் ரெட்டி மீது நடவடிக்கை கோரி ராமமூர்த்தி ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.


இதில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி சாஹி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ரா மூர்த்தியார் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் நிலம் தொடர்பான விவகாரத்தில் அமைச்சர் வீரமணி தலையீடு தனிப்பட்ட முறையில் இருப்பதால் அமைச்சர் என்ற அடிப்படையில் இல்லை என்றால் என்பதால் அவருக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்க அரசு முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.


அதேபோல அமைச்சர் வீரமணி க்கு எதிராக சிவில் வழக்கு தொடர்வது அல்லது ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி செயல்படுவதால் என்பது குறித்து மனுதாரர்கள்  முடிவு எடுக்கலாம் என உத்தரவில் தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு