பைக் திருட முயன்ற வாலிபர் விசாரணையின் போது காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓட முயற்சி

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைக்க முயன்ற போது அங்கிருந்த பொதுமக்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள துணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற மணிகண்டன் என்ற வாலிபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.


விசாரணையின்போது காவல் நிலையத்தில் இருந்த கணினி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி கடிகாரம் போன்ற பொருட்களை சேதப்படுத்தி விட்டு காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய மணிகண்டன் காவல் ஆய்வாளர வாகனத்தின் கண்ணாடி கையில் வைத்திருந்த கற்களால் சேதப்படுத்தி விட்டு தப்ப முயன்ற போது விரட்டிச் சென்று பிடித்து உள்ளனர்.


பின்னர் மீண்டும்அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் வாகன திருட்டில் ஈடுபட முயன்ற வாலிபர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த என்றும் இவர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது மேலும் மணிகண்டனிடம காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

SSS கல்லூரி மாணவி அஸ்வினி சுரேசுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு