கோயிலில் மாஸ்க் அணியாத புதுமணத் தம்பதி : அபராதம் விதித்த அதிகாரிகள்

திருவேற்காடு அம்மன் கோயிலில் முகக்கவசம் அணியாத புதுமணத் தம்பதி மற்றும் பக்தர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


பெரும்பாலான தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கு இருக்கும் நிலையில், கோயில்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கோயிலுக்கு வயதானவர்கள், சிறுவர்கள் வரக்கூடாது எனவும், முறையாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் திருவேற்காடு நகராட்சி மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முறையாக முகக் கவசம் அணிந்து வருகிறார்களா? என்பது குறித்து நகராட்சி கமிஷனர் செந்தில் குமரன், கோயில் இணை ஆணையர் லட்சுமணன், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது முகக் கவசம் அணியாமல் கோயிலுக்கு வந்த புதுமணத் தம்பதி மற்றும் பக்தர்களுக்கு அபராதம் விதித்ததுடன், முகக்கவசங்களை வழங்கினர். அத்துடன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் சானிடைஸர் கொடுக்கப்பட்ட பின்னரே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதை உறுதி செய்தனர்.


கோயில் வளாகத்திலேயே மருத்துவ குழு அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு முழு உடல் பரிசோதனையும் செய்யப்படுவதை கண்காணித்தனர். மேலும் கோயில் முழுவதும் கிருமி நாசினிகள் மற்றும் தனிமனித இடைவெளி முறையாக கிடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது வழக்கு
Image