மூதாட்டியிடம் மகன்போல பழகி வாடகை வீட்டை சொந்த வீடாக்கிய மோசடி இளைஞர்..!


வயதான மூதாட்டியை ஏமாற்றி வாடகைக்கு குடியிருந்தவரே 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை சொந்தமாக்கிய சம்பவம் பூந்தமல்லியில் அரங்கேறியுள்ளது.


பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 80வயது சரோஜா என்ற மூதாட்டி. 2 மகள்களை திருமணம் செய்துகொடுத்துவிட்டு தனக்கு வரும் பென்ஷன் தொகை மற்றும் வீட்டு வாடகை தொகையை வைத்து தனியே வாழ்ந்து வருகிறார்.


50 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 500 சதுர அடிக் கொண்ட வீட்டில் மூதாட்டி உட்பட 6 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.


மூதாட்டியின் வீட்டில் 9 ஆண்டுகளாக ஸ்டீபன் என்பவரும் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இந்தநிலையில், மூதாட்டியின் பக்கத்துவீட்டில் வருவாய் துறை அதிகாரிகள் சர்வே எடுக்கும்போது, மூதாட்டியின் வீட்டையும் அளவு எடுத்துள்ளனர்.


அப்போது, அங்கு இருந்த ஸ்டீபன், சரோஜா பாட்டி இந்த வீட்டை தனக்கு எழுதி கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். சந்தேகமடைந்த வருவாய் துறை அதிகாரிகள் இதுகுறித்து அவரது மகள்களுக்கு தகவல் கொடுத்தனர்.


அப்போதுதான் சரோஜா பாட்டி ஏமாற்றப்பட்டது அவரது மகள்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து நசரத்பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் ஸ்டீபனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஸ்டீபன் செய்த மோசடிகள் வெளித்திற்கு வந்தது.


அதாவது, மூதாட்டியின் வீட்டில் பல ஆண்டுகளாக வாடகைக்கு இருந்து வந்த ஸ்டீபன் அவரது மகனை போல் பழகி உள்ளார்.


மேலும் சரோஜா வயதானதால் வெளியே செல்ல முடியாத சூழலில் தனது வங்கி கணக்கில் உள்ள பென்சன் பணம் ரூ.5 ஆயிரம் எடுக்க காசோலை கொடுத்தால் அதனை ரூ.50 ஆயிரமாக மாற்றி பணத்தை எடுத்து ஏமாற்றியுள்ளார்.


அதுபோல் சுமார் ரூ.4 லட்சம் வரை பணத்தை எடுத்து மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானது. மேலும் இவருக்கு சொந்தமான ஆறு வீடுகளில் வரும் வாடகை பணமான ரூ.8 லட்சத்தையும் மோசடி செய்துள்ளார்.


இது மட்டுமின்றி, மோசடியின் உச்சமாக மூதாட்டியின் சில வேலைகளுக்கு POWER OF ATTORNY இருந்தால் தான் செய்யமுடியும் என்று மூதாட்டியை நம்பவைத்து வீட்டை தனது பெயரில் எழுதி வாங்கியுள்ளார் ஸ்டீபன். இதுதொடர்பாக மோசடி வழக்கை பதிவு செய்து ஸ்டீபனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


வயதான மூதாட்டியை ஏமாற்றி பேராசையால் வாடகைக்கு இருந்த வீட்டையே தனது பெயருக்கு மாற்றி மோசடி செய்த நபர் தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)