ம.பியில் முடித் திருத்தகம் அமைக்க நிதியுதவி கேட்ட இளைஞரிடம் முகச்சவரம், முடித் திருத்தம் செய்த அமைச்சர்

மத்திய பிரதேசத்தில் முடிதிருத்தகம் அமைக்க நிதியுதவி கேட்ட நபர் நிகழ்ச்சி மேடையில் அமைச்சருக்கு முடிதிருத்தம் செய்த சம்பவம் நடந்தேறியது.


மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் உள்ள குலாய்மால் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா கலந்துகொண்டார்.


அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த ரோஹிதாஸ் என்பவர் முடிதிருத்தகம் அமைக்க அமைச்சரிடம் நிதியுதவி கோரினார்.


அவரின் திறனை பரிசோதிக்க விரும்பிய அமைச்சர் அவரை மேடைக்கு அழைத்து தனக்கு உடனடியாக முடிதிருத்தம் மற்றும் முகச்சவரம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.


இதையடுத்து ரோஹிதாஸ் முகக்கவசம் அணிந்தவாறு மேடையில் அனைவரின் முன்னிலையில் அமைச்சருக்கு முடிதிருத்தம் மற்றும் முகச்சவரம் செய்தார்.


அவரின் பணியில் திருப்தி ஏற்பட்டதையடுத்து, முடி திருத்தகம் அமைக்க உடனடியாக மேடையிலேயே 60ஆயிரம் ரூபாயினை அமைச்சர் விஜய் ஷா வழங்கினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா