மேலும் ஏழு சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி

சென்னை சென்ட்ரலில் இருந்து ஆலப்புழாவிற்கும், தமிழகத்தில் மேலும் ஏழு சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி அதன்படி,


சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திலிருந்து நெல்லைக்கு நாள்தோறும் விரைவு ரயில் இயக்கப்பட இருக்கிறது. எழும்பூரிலிருந்து செங்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்திற்கும் தினசரி ரயில் இயக்கப்படுகிறது.


இதேபோல், எழும்பூரிலிருந்து மதுரைக்கு பகல் நேர தேஜஸ் ரயிலும் வாரம் ஆறு நாட்களுக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து ஆலப்புழாவிற்கும், காரைக்காலில் இருந்து எர்ணாகுளத்திற்கும், எழும்பூரிலிருந்து


கொல்லத்திற்கு நாள்தோறும் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ரயில் இயக்கப்படுவதற்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை