குளியலறையில் ரகசிய கேமரா: கேரளாவில் கொரோனா முகாமில் நடந்த கொடூரம்

கேரளாவில் தொடக்கத்தில் அதிகரித்தும் பின்னர் கட்டுக்குள்ளும் இருந்த கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


கேரளாவிலுள்ள பல்வேறு கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான பாறசாலையில் ஸ்ரீ கிருஷ்ணா பார்மசி கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.


இந்த மையத்தில் கேரளா மாநிலம் செங்கல் பகுதியின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் 25 வயதான ஷாலு கொரானா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதே சிகிச்சை மையத்தில் பாறசாலை அருகே உள்ள 20 வயது இளம் பெண்ணும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


அவர் குளியல் அறையில் குளித்து கொண்டு இருந்தபோது ஒரு செல்போன் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த செல்போனை எடுத்து பார்த்தபோது குளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.


தொடர்ந்து செல்போனை எடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கொடுத்து அந்த பெண் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து பாறசாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்போனை ஆய்வு செய்தனர்.


அப்போது செல்போன் அந்த மையத்தில் சிகிச்சை பெற்று வரும் ஷாலுவின் செல்போன் என தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் செல்போனை மறைத்து வைத்து வீடியோ பதிவு செய்ததை ஒப்புக்கொண்டார். இதை அடுத்து அவரை கைது செய்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)