தத்தெடுத்த மகள் பாலியல் வன்கொடுமை.. வளர்ப்பு தந்தையே செய்த கொடூரச் செயல்

விருதுநகர் பாறைப்பட்டியை சேர்ந்த மகேந்திரன்-தமிழ்செல்விக்கு 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை . இதனால் கடந்த 11 ஆண்டுக்கு முன்னர் தனியார் ஆசிரமம் ஒன்றில் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.


இந்நிலையில் தத்தெடுத்து வளர்த்து வந்த 11 வயது மகளை 2018ம் ஆண்டு முதல் மகேந்திரன் மற்றும் அவரது அண்ண ன் மகன் காமராஜ் பெருமாள் ஆகிய இருவரும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இதை யாரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.


இது குறித்து தாயிடம் சிறுமி தெரிவித்ததை தொடர்ந்து தாய் தமிழ்செல்வி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் தந்தை மகேந்திரன் மற்றும் காமராஜ் பெருமாள் ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் விருதுநகர் மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.