குவைத்: உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா(91) காலமானார்.

குவைத் மன்னராக ஷேக் சபா அல் அகமது அல் சபா(91) கடந்த 2006ம் ஆண்டு முதல் உள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 18ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அமீர், அமெரிக்காவுக்கு ஜூலை 23ம் தேதி அழைத்து செல்லப்பட்டார். அவரது சிகிச்சை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


அவருக்கு பதிலாக, குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் நவாப் அல் அகமது சபா(83), தற்காலிக மன்னர் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், மன்னர் அமீர் ஷேக் சபா இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மன்னர் இறப்பை அடுத்து, குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.