75 ஆண்டுகால திருமண பந்தம்... காலையில் கணவர், மாலையில் மனைவி அடுத்தடுத்து இறந்த சோகம்!

அரியலூர் மாவட்டத்தில் கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


75 வருடங்களுக்கும் மேல் வாழ்க்கைப் பயணத்தில் ஒன்றாக வாழ்ந்த தம்பதிகள் மரணத்திலும் ஒன்றாக சென்றுள்ளது கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காசான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சேதுமணியன் - கமலம் தம்பதி. 75 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழந்து வந்தனர்.


இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக 94 வயதான சேதுமணியன் உடல்நலக் குறைவு ஏற்பட்டு நேற்று மரணமடைந்தார்.


நேற்று மாலை சேதுமணியனுக்கு நடைபெற்ற இறுதிச் சடங்கின்போது உறவினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கோடித்துணி போர்த்திக்கொண்டிருந்தனர். அதைப் பார்த்த கமலம் துயரம் தாங்கமுடியாமல் கதறி அழுது மயங்கி விழுந்துள்ளார். உடனே ஓடிச்சென்ற உறவினர்கள் கமலத்தைத் தூக்கிய போது அவரது உயிர் பிரிந்திருந்தது.


இதையடுத்து கணவன் மனைவி இருவரையும் உறவினர்கள் சுடுகாட்டில் அருகருகே அடக்கம் செய்தனர். 75 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தம்பதியர் மரணத்திலும் ஒன்றாக சென்றுள்ளது காசான்கோட்டை கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா