அகரம் அறக்கட்டளையில் கல்வி உதவித்தொகை பெற 7,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

நடிகர் சூர்யா, அகரம் அறக்கட்டளை மூலம் தொடர்ச்சியாக ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்.


இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களுக்கு உதவி செய்வதற்காக கடந்த 1ம் தேதி முதல் விண்ணப்பப் படிவங்கள் தி நகரில் உள்ள அகரம் அறக்கட்டளையில் வழங்கப்பட்டு வருகின்றன


.செப்டம்பர் 15ம் தேதி வரை வழங்கப்பட்டு வந்த விண்ணப்பப் படிவங்கள் இரண்டு நாட்கள் கூடுதலாக இன்றும் நாளையும் வழங்கப்பட்டு வருவதால் அதிக அளவிலான மாணவர்கள் படிவங்களைப் பெற்று வருகின்றனர்.செப்டம்பர் 14ம் தேதி வரை 3,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வரை கல்வி உதவித்தொகைக்காக மொத்தம் 7,000 மாணவ, மாணவிகள் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!