பாதுகாப்பு துறைக்கான புதிய கொள்முதல் செயல்முறை ஆவணத்தை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட்டார்

டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு துறைக்கான கொள்முதல் கவுன்சில் கூட்டத்தில், புதிய கொள்முதல் செயல்முறைக்கான ஆவணத்தை, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிட்டார்.


அப்போது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்எம்.நரவானே, விமானப்பபடை தளபதி ஆர்கேஎஸ். பதாரியா, கடற்படை தளபதி கரம்பிர்சிங் ஆகியோரும் உடன் இருந்தனர்.


பின்னர் பேசிய ராஜ்நாத்சிங், புதிய கொள்கை முடிவால் ஆண்டுக்கு 52 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பாதுகாப்பு துறைக்கான தளவாடப் பொருட்களை இந்தியாவில் தயாரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


இந்திய பாதுகாப்பு படைகளுக்கு, வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் மற்றும் தளவாடப்பொருட்களை இறக்குமதி செய்வது குறைக்கப்படும் என்று ஏற்கனவே அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.