பழைய மொந்தையில் புதிய கள்ளு ஏ.சி. முத்தையா 508.4 கோடி கடன் விவகாரம்..!

கைபேசி முதல் வாட்ஸ்அப், குறுஞ்செய்தி, வலைத்தளங்கள், பத்திரிக்கைகள், ஊடகங்கள், சினிமா என்கிற பொதுஜன ஊடகத்தின் மூலம் மிகவும் பிரபலமாக எழுதியும், பேசியும் அறிமுகமானவர், பெங்களூருவைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் மல்லையா!.


பல்வேறு வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். இவரை போல் வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகியோரும் பல வங்கிகளில் பணம் கடன் பெற்று விட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர். இது தவிர, இந்த நடவடிக்கைகளை பின்பற்றியே, மேலும் பல இந்திய தொழில் அதிபர்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளனர்.


இந்த வங்கி கடன் மோசடிகள் தொடர்பாக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையா உள்ளிட்ட தொழில் அதிபர்களை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவது ஒரு பக்கம் இருந்தாலும்; விஜய் மல்லையா லண்டனில் இருந்தபடி, தனக்கு எதிரான வழக்குகளை சந்தித்து வருகிறார்.


இது தொடர்பாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பிரச்சினையை கிளப்பிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வங்கிகளில் அதிக அளவில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர் பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். இதனால் சபையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி அமளி ஏற்பட்டது.


இந்த நிலையில், சாகேத் கோகலே என்பவர் (RTI) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், வங்கியில் கடன் பெற்று விட்டு, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல், கடன் மோசடியில் ஈடுபட்டுள்ள பட்டியலில் முதலிடத்தில் உள்ள 50 பேர்களின் பெயர்களை தெரிவிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.


அவர் கேட்டுக் கொண்டதின் பேரில், கடந்த 24ந்தேதி ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 50 பேரின் பெயர்களையும், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ந்தேதி வரை அவர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்ற விவரத்தையும் தெரிவித்துள்ளதோடு, தொழில்நுட்பரீதியாகவும், விவேகமான நடவடிக்கை என்கிற பெயரிலும், வங்கிகளில் பெறப்பட்ட கடன் மொத்தம் ரூ.68 ஆயிரத்து 607 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்திருந்தது.


வேண்டுமென்றே வங்கியில் கடனை பெற்றுவிட்டு இவர்கள் மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. வங்கிகளிலும் வராக்கடன் அதிகமாகி வருகிறது. இந்த வங்கிக் கடன் மோசடிப் பட்டியலில் தற்போது சேர்ந்திருப்பவர், பிரபலமான செட்டிநாட்டு குடும்பத்தைச் சேர்ந்த வரும், பிரபல தொழிலதிபருமான ஏ.சி.முத்தையா.


யார் இந்த ஏ.சி முத்தையா? அ.சி.முத்தையா என்னும் அண்ணாமலை சிதம்பரம் முத்தையா அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை நிறுவிய அண்ணாமலை செட்டியாரின் மகன் வழிப் பேரன் ஆவார். தொழிலதிபர் எம்.ஏ.சிதம்பரத்தின் மகன் ஆவார். விவசாயிகளை பெரிதும் கவர்ந்த, ஸ்பிக் நிறுவனத்தின் தலைவர்.


1999 முதல் 2001 வரை இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்தார்மிகவும் பிரபலமான தொழிலதிபரானமு.அ.முத்தையா இவருக்கு மாமா முறையாகும்ஒன்றுவிட்ட சகோதரராக எம்.ஏ.எம்.ராமசாமி ஆவார்.


எம்ஏசி குழு நிறுவனங்களின் முன்னாள் தலைவரான இவர், தமிழகத்தின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி தலைவராக உள்ளார். இவர் கடன் மோசடி செய்ததாக ஐடிபிஐ (IDBI) வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


(FIRST LEASING COMPANY) பர்ஸ்ட் லீசிங் கம்பெனியின் தலைவராக ஏ.சி.முத்தையா இருந்துள்ளார். அத்துடன் இந்த நிறுவனத்தின் புரமோட்டர்களாக ஏ.சி.முத்தையா மற்றும் பரூக் இரானி என்பவரும் இதில் இருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி நிலவரப்படி, பர்ஸ்ட் லீசிங் கம்பனி என்கிற இந்த நிறுவனம் வாங்கிய ரூ 508.4 கோடி கடனை திருப்பி செலுத்தவில்லை என தெரியவந்ததை அடுத்து, இவர்கள் இருவரும் வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்த தவறிய கடனாளிகள் என ஐடிபிஐ வங்கி அறிவிப்பில் கூறியுள்ளது.


இது ஒருபுறம் இருக்க, ஏ.சி.முத்தையா மற்றும் இரானி ஆகிய இருவரும் சிண்டிகேட் வங்கிக்கு 102.87 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் சிபிஐ தரப்பில், 2018ல் குற்றப்பத்திரிகை ஒன்றும் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மறுபுறம், நிறுவனத்துக்காக வாங்கிய இந்த கடன் தொகையை, வேறு வகையில் முறைகேடாக பயன்படுத்தியதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்த குற்றச்சாட்டை வைத்து அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றன. வங்கிக் கடன் மோசடி விவகாரம் மிகவும் பழையதாக இருந்தாலும், தமிழகத்தின் மிகப்பெரிய பாரம்பரிய மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவரும், பிரபல தொழிலதிபரானவருமான ஏ.சி.முத்தையா கடன் மோசடி செய்த விவகாரம், தொழிலதிபர்கள் மத்தியிலும் பிரபலமானவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவில் தொடர்ந்து வங்கி மோசடியில் ஈடுபட்டு வருபவர்களின் பட்டியல் உயர்ந்து கொண்டே போகிறது. இந்த வகையில் தற்போது வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள ஏ.சி. முத்தையாவை தொடர்ந்து இன்னும் யார் யாரெல்லாம் வங்கி மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது வெளிவாப் என்று எல்லோரும் அச்சரியக்கடன் எதிர்பார்க்கக் கொண்டிருக்கிறார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு