தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பொறுப்பற்ற அலட்சியத்தால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும்

சென்னை மாநகராட்சி- தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பொறுப்பற்ற அலட்சியத்தால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும்* சென்னை மாநகராட்சி மற்றும் மின்வாரிய அலட்சியத்தால், சாலையில் அறுந்து கிடந்த மின்சார ஒயரை மழைநீரில் தெரியாமல் மிதித்து உயிரிழந்த பெண்மணி* *அலீமா குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்* *சென்னை திருவிக நகர் புளியந்தோப்பு பெரியார் நகர் ஹவுசிங்போர்டில் வசித்துவரும் சேக் இப்ராஹீம் மனைவி அலிமா (வயது 45) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.* *சென்னையில் நேற்று (செப்டம்பர் 14/2020) முன்தினம் முதல் மழை பெய்து கொண்டே இருந்ததால், *பெரியார் நகர் தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றது. அந்த பகுதியில் சாலையோரம் நிலத்திற்கு அடியில் சென்று கொண்டிருந்த மின்சார வயர், வெளியே தெரியும்படி இருந்தது*. *நேற்று வீட்டு வேலை செய்வதற்காக சென்னை நாராயணசாமி தெருவில் நடந்து சென்ற அலிமா, மழைநீரில் தெரியாமல் மின்சார வயரை மிதித்து விட்டார்* *இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் கீழே விழுந்து இறந்தார்*. *இதை தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம், இதுகுறித்து விளக்கமளிக்க சென்னை மாநகராட்சி ஆணையர், மின்சார வாரியத் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.* இதையடுத்து, கோட்ட *உதவி மின் பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் வெங்கட ராமன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.* அலிமாவின் உயிர் அநியாயமாகபோக காரணமான சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள், தங்களது குடும்பத்தினரை இப்படி சாகாமல் பாதுகாப்பதுடன் , பரிதாபமாக உயிரிழந்த அல்மாவின் குடும்பத்துக்கு தமிழக அரசு உடனடியாக ரூ 50 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.