கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு

மதுரையில் கொரோனா நோய் தொற்றால் சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழந்தது காவல்துறையினர் மத்தியில் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


மதுரை மாநகர சுப்பிரமணியபுரம் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த சந்தான பாண்டி என்பவர், கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மூச்சுத்திணறல் அதிகரித்து இன்று அவர் உயிரிழந்துள்ளார்.


56 வயதான சந்தான பாண்டி இதற்கு முன்னர் மதுரை சிபிசிஐடி காவல்துறையில் பல ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார். பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மதுரை மாநகர காவல்துறையைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் உயிரிழந்தது காவல்துறையினர் மத்தியில் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா