நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யக் காலக்கெடு நவம்பர் 30 வரை நீட்டிப்பு!

2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஆண்டு வருமானம் இரண்டரை லட்ச ரூபாய்க்கு மேல் உள்ளவர்கள் தங்கள் வருமான வரி அறிக்கையை வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும்.


வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருமான வரி வரம்புக்குக் கீழ் வந்தாலும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது 2018ஆம் ஆண்டில் இருந்து கட்டாயமாக்கப்பட்டது.


அதன்படி 2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது.


கொரோனா சூழலில் வரி செலுத்துவோரின் இன்னலைக் கருத்திற்கொண்டு இந்தக் காலக்கெடுவை நவம்பர் 30 வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு