மகாராஷ்டிரா கட்டட விபத்து: உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு


மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியில் இன்று அதிகாலை 3.40மணி அளவில் மூன்று மாடிக் கட்டிடம் விழுந்து விபத்துக்குள்ளானது உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.


அதிகாலைநேரம் என்பதால் தூக்கத்தில் இருந்த பலரும் இடிபாடுகளில் சிக்கிய தாக கூறப்பட்டது இதனை அடுத்து எட்டுப்பேர் முதலில் சடலமாக மீட்கப்பட்டனர் .


இருபதுக்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டனர்.மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்


மேலும் இருவர் சடலமாக மீட்கப்பட்டனர் தற்போது வரை கட்டிட விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதற்கிடையே மகாராஷ்டிரா கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்