காவலர் தற்கொலை - ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நேர்ந்த சோகம்!


திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை அனலை பெரியார் நகரை சேர்ந்தவர் ஆனந்த் (26). இவர் 2017 ஆம் ஆண்டு காவல் பணிக்கு வந்து திருச்சி மாவட்ட ஜீயபுரம் வாத்தலை காவல் நிலையத்தில் 10.09.2019 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்துள்ளார்.


அப்போது திருச்சி மாவட்ட காவல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட ரேஸ் குழுவில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்த் ஆன்லைனில் ரம்மி சீட்டு ஆட்டம் விளையாடுவதை வழக்கமாக செய்துள்ளார்.


இதற்காக தன்னுடன் பணிபுரியும் நண்பர்களிடம் அவ்வப்போது கடன் வாங்கி வந்ததாகவும் அவ்வாறு வாங்கிய கடனை திரும்பி கொடுக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்தது தெரிய வருகிறது. 


மேலும் தனது வீட்டருகே பெண் காவலர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். வீட்டில் இருக்கும்போது இருவரும் சந்தித்துப் பேசுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது இரு வீட்டாருக்கும் பிரச்சனைகள் நடந்து கொண்டிருந்திருக்கிறது.


நேற்றும் கூட இரு வீட்டாருக்கும் பிரச்சனை என கூறப்படுகிறது. ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததும், தன்னுடைய காதலும் கைகூடவில்லை என மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.


ஆன்லைனில் ரம்மி சர்கிள் விளையாடி கடன் மேலும் அதிகமானதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு பணி முடித்து வீட்டுக்கு சென்றவர். இரவு 11 மணிக்கு மேல் தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மாட்டுக் கொட்டகையில் தனது அம்மாவின் சேலையால் தூக்கு மாட்டி இறந்துள்ளார்.


இன்று அதிகாலை 3 மணிக்கு மாட்டு கொட்டகைக்கு சென்ற அவரது அப்பா கோவிந்தராஜ் தனது மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளார்.


இதனையடுத்து இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு