தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை இனியும் தேவையற்றது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதளர்வுகளின் அடிப்படை நோக்கத்தையே அடியோடு சீரழிக்கும் அடாவடிச் செயல் எனவும் கூறியுள்ளார். அவசரங்களுக்கு விண்ணப்பிக்கும் இ-பாஸ் பொருந்தாத காரணங்களைச் சொல்லி பலமுறை நிராகரிக்கப்பட்டு விடுவதாகவும், பத்து முறை விண்ணப்பித்தாலும் நேர்மையான முறையில் பாஸ் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.