சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி தேசபற்றை வளர்ப்போம் : காயல் அப்பாஸ் சுதந்திர தினம் வாழ்த்து !

1947 ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி என்பது ஓவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும், நிற்கும் தினமாகக்கருதபடுகிறது. அந்த நாள் நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள் மற்றும் ஒரு தொடக்கத்தின் தொடக்க நாள் என்று சொன்னால் அது மிகையாகாது ஏனென்றால் இறையான்மை கொண்ட நாடாக திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் வெற்றி என்று பெருமையுடன் தலை நிமிர்ந்து சொல்லலாம்.


நமது தாய் நாடான இந்தியா சுதந்திர மடைந்து சுமார் நூற்றாண்டுகளையும் கடந்து நாம் சுதந்திரமாக நமது தாய் மண்ணில் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டிருக்கிறோம்.


ஏன்றால் அதற்கு முதன் முதல் காரணம் நமது தேசிய தலைவர்களும் போராட்ட வீரர்களுமே இரு நூறு ஆண்டுகளாக நமது நாட்டிலேயே நாம் அந்திய தேசத்தவரிடம் அடிமைகளாக இருந்த போது அவர்களை தைரியத்துடன் , துணிச்சலுடனும் , பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும், நடத்தி வெற்றியும் தோல்வியும் கண்டுள்ளனர்.


சுதந்திரம் என்ற ஓன்றை மட்டுமே கருத்தில் கொண்டு தமது இன்னுயிரையும் துறந்த மகான்களின் தியாக உள்ளங்களையும் அவர்கள் போராடி பெற்று தந்த சுதந்திரத்தை அந்நாளில் நாம் களிப்புற கொண்டாடுவோம். நமது சுதந்திரத்திற்க்காக போராடிய பல தலைவர்களும் புரட்சியாளர்களும் தள்ளாடும் வயதை கடந்து கொண்டிருக்கும் வேலையில் சுதந்திரத்தை பற்றியும் அதன் வரலாற்றை பற்றியும் நமது இந்திய நாட்டின் பிரஜைகள் தெரிந்து கொள்வது அவசியம்.


ஓவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசிய கொடியேற்றி நல திட்ட உதவிகளை வழங்குவார்கள். பள்ளிகலும் கல்லுரிகளிலும் தேசிய கொடி ஏற்றபட்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய பின்னர் விடுமுறை அளிக்கபடும்.


டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படும் இத்தினத்தில் நாட்டின் பிரதமர் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றுவார். இவ்விழாவில் முப்படை அணிவகுப்பு , நடனம், நாட்டியம், என பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகளும் இடம் பெறும் ஓவ்வொரு பிரஜைக்கும் முக்கியமான தினம் என்பதால் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை இந்த நாளில் தங்களது பிரிய மாணவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். எனவே : சுதந்திரதினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி தேசபற்றை வளர்ப்போம்.


அனைவருக்கும் 74வது சுதந்திர தினம் நல் வாழ்த்துக்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)