தானியங்கி முறையில் இபாஸ் வழங்க ஆன்லைனிலும் மாற்றங்கள் - சென்னை மாநகராட்சி

தமிழகத்தில் மாவட்டங்களிடையே பயணிக்க விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.


இதற்கேற்ப தானியங்கி முறையில் இபாஸ் வழங்கும் வகையில் ஆன்லைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


கொரோனா தொற்று பரவுவதை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அதன்படி மாவட்டங்களிடையே பயணிக்க நேற்று வரை இ-பாஸ் கட்டாயமாக இருந்தது.


குடும்பத்தினர், நெருங்கிய உறவினர் இறப்புக்கு செல்வதற்காகவும், திருமணம், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காகவும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது.


பல மாவட்டங்களில் இ-பாஸ் வழங்குவதில் அரசு அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதோடு, இ-பாஸ் வாங்குவதில் பெரும் சிரமம் இருப்பதாக பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்தனர்.


இந்நிலையில், மாவட்டங்களிடையே பயணிக்க, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் முறை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.


ஆதார், குடும்ப அட்டை, செல்பேசி எண் விவரங்களுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாமதமின்றி உடனடியாக இ பாஸ் வழங்கப்படுகிறது. ஆட்டோ-ஜெனரேட் எனப்படும் தானியங்கி முறையில் உடனடியாக இ-பாஸை பதிவிறக்கிக் கொள்வதற்கேற்ப ஆன்லைனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


அதேசமயம், பொதுமக்கள் தேவையற்ற காரணங்களுக்காக விண்ணப்பிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தமிழகத்துக்கு வருவோருக்கு ஏற்கெனவே உள்ள இ-பாஸ் நடைமுறை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)