சீனிவாசன் உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளரை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய வேண்டும் : தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !

திருவள்ளூர் மாவட்டம் புழல் அடுத்த விநாயகபுரம் பால விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் இவரது வீட்டில் சீனிவாசன் என்பவர் கடந்த ஆறு மாத காலமாக வாடகைக்கு வசித்து வந்துள்ள நிலையில் ஊரடங்கும் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து மூன்று மாதமாக வீட்டு வாடகை கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்த சீனிவாசனை வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரன் வற்புறுத்தியுள்ளார்


இதற்கு சீனிவாசன் மறுப்பு தெரிவித்ததால் ராஜேந்திரன் புழல் காவல் நிலையத்தில் கடந்த 29ஆம் தேதி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் புழல் காவல் ஆய்வாளர் பென் சாம் , சீனிவாசனிடம் விசாரணை நடத்தியுள்ளார் அப்போது சீனிவாசன் குடும்பத்தினர் முன்னால் சீனிவாசன் மீது காவல் ஆய்வாளர் பென் சாம் தாக்கியதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது .


மேலும் காவல் ஆய்வாளர் பென் சாம் தாக்கிய அவமானத்தை தாங்க முடியாத சீனிவாசன் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் சீனிவாசனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் அங்கு சீனிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்கிற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது .


சீனிவாசனை இழந்து அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம். மேலும் உயிரிழந்துள்ள சீனீவாசன் குடும்பத்திற்கு ரூ பத்து லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.


சீனிவாசன் குடும்பத்தில் ஓருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது . தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வந்த நிலையில் சீனிவாசன் தன்னை காவல் ஆய்வாளர் பென் சாம் தாக்கி அவமானப்படுத்தியதாகவும், அதனால் தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.


அதன் அடிப்படையில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் சென்னை புழல் காவல் ஆய்வாளர் பென் சாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் . மேலும் சீனிவாசன் உயிரிழப்புக்கு காரணமான காவல் ஆய்வாளர் பென் சாமை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .


மேலும் ஊரடங்குனால் ஏழை , மற்றும் நடுத்தர மக்கள் வேலையின்றி தினசரி வருமானம் இல்லாமல் பொருளாதார நெருக்கடியில் வாழ்வாதாரம் பாதிக்கப்ட்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் நிலையில் வீட்டு வாடகைதாரர்களை வீட்டின் உரிமையாளர்கள் வாடகை கேட்டு வற்புறுத்தி வருவதனால் உயிரிழப்பு சம்பவம் தொடர்ந்த வண்ணமாக உள்ளது .


எனவே : இனி வரும் காலங்களில் இது போன்று உயிரிழப்பு சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)