பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக திமுகவில் இருந்து விலக முடிவு - கு.க.செல்வம்

திமுகவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ஆயிரம் விளக்கம் தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தமது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது, திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இருக்காது என்பதுடன், தம்மிடம் பணமும் இல்லை என்பதால் கட்சியில் தாம் ஓரங்கட்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


பாஜக தலைவர் நட்டாவை சந்தித்தது குறித்து விளக்கம் கேட்டு திமுக தலைமை அனுப்பிய கடிதம் தமக்கு கிடைக்கவில்லை என்றும், கிடைத்தபின் என்ன விளக்கம் கேட்கப்பட்டுள்ளதோ அதற்கு பதிலளிக்க உள்ளதாகவும் கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.


திமுகவில் இருக்க பிடிக்கவில்லை என்பதால், கட்சி அளித்த பொறுப்புக்களை எடுத்துக் கொள்ளுமாறு 10 நாட்களுக்கு முன்னரே கூறி விட்டதாக தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு