அனைவருக்கும் 'இ-பாஸ்' -புதிய தளர்வு அறிவிப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது.


ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு அல்லது பிற மாநிலங்களுக்கும் செல்வதற்கு இ-பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.


ஆனால் எதிர்க்கட்சியான திமுக மற்றும் பாஜக சார்பில் கூட இந்த இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அண்மையில் இ-பாஸ் முறையை எளிமைப்படுத்த


இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்நிலையில் தற்பொழுது விண்ணப்பித்த அனைவருக்குமே இ-பாஸ் கிடைக்கும்.


ஆதார் அல்லது ரேஷன், அட்டை நகல், தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் வழங்கப்படும் என இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டுமே இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சைகளுக்கு மட்டுமே இ-பாஸ் என்ற கட்டுப்பாடு தற்பொழுது தளர்த்தப்பட்டுள்ளது.


புதிய இ-பாஸ் நடைமுறை வருகின்ற 17 ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
அடி..வாட்டர் பாட்டில் ...முதுகில் குத்து.. டயர் பஞ்சர் : கூட்டத்தில் வைத்து OPS-ஐ தாக்கிய கும்பல்
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
ஆர்டர்லிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
Image