குளித்துவிட்டு வந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி - தலைமை காவலர் மீது புகார்..

சென்னை பெரம்பூர் அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக போக்குவரத்து தலைமை காவலர் மீது புகார் எழுந்துள்ளது.


சென்னை பெரம்பூர் ரமணா நகர் சுப்பிரமணியன் கோயில் தெருவை சேர்ந்தவர் கலையரசி(30). இவர் கண்ணன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளார். இந்நிலையில், கண்ணன் அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.


இது குறித்து கலையரசி செம்பியம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “குளியலறையில் இருந்து குளித்து விட்டு வெளியே வரும்போது கண்ணன் கையை பிடித்து தவறாக நடக்க முயற்சி செய்தார். இதனால் பக்கத்துவீட்டில் தஞ்சமடைந்தேன்.


இதுகுறித்து எனது கணவரும் மாமியாரும் கேட்க சென்றபோது அவரையும் கண்ணன் தாக்கினார். image அக்கம் பக்கத்து வீட்டாரிடமும் கண்ணன் தவறாக நடந்துள்ளார்.


காவல் துறையில் பணியாற்றுவதால் தன்னை ஏதும் செய்யமுடியாது எனக்கூறி மிரட்டுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வேப்பேரி போக்குவரத்து காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் கண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.