சிவனடியார் தற்கொலை.. தனது ஆத்மா எஸ்ஐ குடும்பத்தை விடாது என சிவனடியார் வீடியோ பதிவு..!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதால் தற்கொலை செய்துக்கொள்வதாக வீடியோ பதிவிட்டு சிவனடியார் உயிரிழந்த விவகாரத்தில் நீதி வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


புளியம்பட்டி குண்டாங்கல் காடு பகுதியை சேர்ந்த சரவணன், சுற்றுவட்டார மக்களுக்கு தாயத்து கட்டுவது, மந்தர கயிறு கட்டுவது, பேய் ஓட்டுவது போன்ற வேலைகளை செய்து வந்தாகவும் அவரை அப்பகுதி மக்கள் சிவனடியார் என்று அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.


கடந்த வாரம் அவரை பார்க்க பெண் ஒருவருக்கு எந்திரம் கட்டிவிட்டு அப்பெண் வாங்கி வந்த உணவை சரவணன் சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார்.


அப்போது அங்கு வந்த தேவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மைக்கேல் அந்தோணி என்பவர் சிவனடியார் சரவணனையும் அப்பெண்ணையும் சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.


மேலும் இருவரையும் தனது செல்போன் மூலம் படம் எடுத்துவிட்டு என்ன செய்யப் போகிறேன் பார் என சொல்லி விட்டு உதவி ஆய்வாளர் மைக்கேல் அந்தோணி சென்றதாக கூறப்படுகிறது.


இதற்கிடையே எஸ்ஐ மைக்கேல் அந்தோணி சிவனடியாக சரவணனை தாக்கிய போது அவரது மகன் சங்கர், மகள் கவிதா ஆகிய இருவரும் நேரில் பார்த்துள்ளனர்.


தனது பிள்ளைகள் முன்பே தன்னை எஸ்ஐ அடித்ததால் மனமுடைந்த சரவணன் சனிக்கிழமை காலை வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை சிவனடியார் சரவணன் வீட்டு அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.


அங்கு சென்று உறவினர்கள் பார்த்த போது, சரவணன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இந்த நிலையில் சிவனடியார் சரவணன் செல்போனில், தற்கொலைக்கு முன்னர் பதிவு செய்துள்ள வீடியோ வெளியாகியுள்ளது. அதில், தனது ஆத்மா எஸ்ஐ மைக்கேல் அந்தோணியின் குடும்பத்தை விடாது என சிவனடியார் கூறுவது போன்ற காட்சிகள் உள்ளன.


தகவல் அறிந்து வந்த போலீசார் சரவணன் உடலை அங்கேயே வைத்து பிரேதப்பரிசோதனை செய்து அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர்.


மேலும் சரவணன் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே போலீசார் மிரட்டியதால் எஸ்ஐ மீது புகார் கொடுக்கவில்லை என்றும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று சிவனடியார் மகன், மனைவி உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இதனிடையே சிவனடியார் மாந்ரீகத்தில் ஈடுபடுவதாகவும், நிர்வாண பூஜைகள் செய்வதாகவும் வந்த புகாரை தொடர்ந்தே போலீசார் விசாரணைக்கு சென்றதாக தேவூர் காவல் நிலைய தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு