தனிமைப்படுத்தலில் தளர்வு இல்லாததால் சென்னைக்கு வர அஞ்சும் வெளிநாட்டு பயணிகள்

தமிழகத்தில் தனிமைப்படுத்தலில் தளர்வுகள் இல்லாததால் சென்னைக்கு வர அச்சப்படும் வெளிநாட்டு பயணிகள், பிற நகரங்களில் இறங்கி உள்நாட்டு விமானங்கள் மூலம் சென்னை வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விமானங்களில் இந்தியா வருபவர்கள், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அரசின் தனிமைப்படுத்தல் முகாம்களில் 14 நாட்கள் தங்குவது அவசியமாகும்.


அதில் சில தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு, 96 மணி நேரத்துக்கு முன்பு பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற மருத்துவ சான்றிதழுடன் வந்தால் அரசின் தனிமைப்படுத்துதல் தேவையில்லை என அறிவித்தது.


இந்த புதிய நடைமுறையை அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் செயல்படுத்தினாலும், தமிழகத்தில் தொற்று அதிகரித்து வருவதால் சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் பழைய நடைமுறையே செயல்படுத்தப்படுகிறது.


இதனால் வெளிநாட்டு பயணிகள் பிற நகரங்களில் இறங்கி, உள்நாட்டு விமானங்களிலோ சாலை வழியாகவோ தமிழகம் வருகின்றனர். உள்நாட்டு விமான பயணிகளுக்கு அரசின் தனிமைபடுத்துதல் தேவையில்லை.