மாநிலத்துக்குள்ளும் மாநிலங்களிடையேயும் மக்களின் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தக்கூடாது-மத்திய உள்துறை எச்சரிக்கை

மாநிலத்துக்குள்ளும் மாநிலங்களிடையேயும் மக்களின் போக்குவரத்துக்கும், சரக்குகளைக் கொண்டுசெல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலத் தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், மாநிலத்துக்குள்ளும், மாநிலங்கள் இடையேயும் ஆட்களின் போக்குவரத்துக்கும், சரக்குகளைக் கொண்டு செல்லவும் தடைகள் விதித்தால் அது மத்திய அரசின் வழிகாட்டு நெறிகளை மீறிய செயலாகும் என எச்சரித்துள்ளார்.


போக்குவரத்துக்கும், சரக்குகளைக் கொண்டுசெல்லவும் கட்டுப்பாடுகள் விதிப்பது பொருட்கள் விநியோகத் தொடரை பாதித்துப் பொருளாதாரச் செயல்பாட்டுக்கும், வேலைவாய்ப்புக்கும் இடையூறு விளைவிக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)