புதுச்சேரி மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரி முதல்வருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு

கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள புதுச்சேரி மக்களுக்கு நிவாரணம் வழங்க கோரி புதுச்சேரி முதல்வருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மாநில செயலாளர் கலீல் ரஹ்மான் கோரிக்கை மனு கொடுத்துள்ளார் . இவ்மனுவில் கூறியதாவது.


கொரோனாவால் புதுச்சேரி மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் , அதாவது கூலி தொழிலாளர்கள் , பொதுதுறை ஊழியர்கள் , சிறுகுறு வியாபாரிகள் , நடைபாதை வியாபாரிகள் , ஆட்டோ ஓட்டுனர்கள் , என்று அனைத்து மக்களும் கையில் பணமில்லாமல் வறுமையில் வாடுகின்றனர் , இது தங்களுக்கும் தெரியும் இருந்தும் இந்த மக்களின் வறுமை நிலையை போக்க ஓவ்வொரு குடும்பத்தினருக்கும் ரேசன் கார்டு மூலம் ரூ 5000/- நிதி உதவி அளிக்க வேண்டுகிறோம் .


மேலும் மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையை தங்களின் அரசு நடைமுறைபடுத்தாமல் புறம் தள்ள வேண்டும் . மேலும் சிகப்பு ரேசன் அட்டைகளை மறு ஆய்வு செய்த பின்னரே புதுச்சேரி அரசு பட்ஜெட்டில் அறிவித்த சலுகைகளை வழங்க வேண்டும் . என்று எங்களுடைய ஜனநாயக மக்கள் எழுச்சி கழக சார்பாக கேட்டு கொள்கிறோம் . என்று இவ்மனுவில் கூறியுள்ளார் .


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா