கட்டுமான நிறுவனங்களுக்கு கடிவாளம்.. உச்ச நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு..!

பிளாட்டுகளை ஒப்படைப்பதில் ஏற்படும் காலதாமதத்திற்கு, கட்டுமான நிறுவனங்கள் , பிளாட் மதிப்பின் அடிப்படையில் வருடாந்திர வட்டி வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


டிஎல்எஃப் சதர்ன் ஹோம்ஸ் நிறுவனம், பெங்களூருவில், இரண்டு முதல் நான்கு வருட கால தாமதத்திற்குப் பிறகு உரிமையாளர்களுக்கு பிளாட்களை வழங்கியது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட் தலைமையிலான அமர்வு பிளாட் முன்பதிவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டுமான நிறுவனங்கள் அளிக்கும் மாதாந்திர, சதுர அடி அடிப்படையிலான வட்டியுடன், இந்த வருடாந்திர வட்டியையும் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இது தொடர்பாக தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், வீடு வாங்குவது என்பது ஒவ்வொருவரின் கனவுத் திட்டம் என்பதால் அதை நிறைவேற்றுவதில் கட்டுமான நிறுவனங்கள் தாங்கள் அளித்த உறுதிமொழியை கடைபிடித்தல் அவசியம் என கூறினர்.