பண்ருட்டியில் இமாம் படுகொலை : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. கடலூர் மாவட்டம் , பண்ருட்டி ரஹ்மத் நகரில் கடந்த 9ஆண்டுகளுகளாக இமாமாக பணிபுரிந்து வந்த முகமது சதாம் ( 30 வயது) 13:08:2020 அன்று மாலை அடையாளம் தெரியாத இருவர் வந்து துஆ ஓத அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.


ஆனால் ரொம்ப நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை என்ற சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளன அதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் 14:08:2020 அன்று கொடூரமான முறையில் முகமது சதாமை சமூக விரோதிகள் படு கொலை செய்து திருநாவலுர் ஏரியில் வீசப்பட்டுள்ள சம்பவம் இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது .


இக்கொடூர கொலை சம்பவத்தை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது. கொடூரமான முறையில் படு கொலை செய்ய பட்டு ஏரியில் விசப்பட்டு சடலமாக கிடந்த முகமது சதாமை காவல் துறை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. என்கிற மிகுந்த வேதனை அளிக்கிறது .


முகமது சதாமை மிகவும் கொடூரமான முறையில் படு கொலை செய்த சமூக விரோதிகளை காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும். இக்கொலைக்கான பின்னனி ஏன்னவென்று காரணத்தை கண்டறிந்து குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.


முகமது சதாமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம். மேலும் கொடூரமான முறையில் உயிரிழந்துள்ள முகமது சதாம் குடும்பத்திற்கு ரூ.இருபது லட்சம் நிவாரணம் தமிழக அரசு வழங்க வேண்டும். மேலும் அவரது குடும்பத்தில் ஓருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .


எனவே : தமிழகத்தில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் மற்றும் படு கொலைகள் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடை பெற்று வருவது கண்டிக்கதக்கது . மேலும் இஸ்லாமியர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)