பொறுக்கிகளுக்கு பாதுகாப்பளிக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கு சவுக்கு சங்கர் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

காவி காவல்துறை சமூக ஊடகங்களில் பெண்களை, பெண் பத்திரிக்கையாளர்களை கொச்சையாக, அருவருப்பாக, அவதூறாக தொடர்ந்து எழுதிவரும் கிசோர் என்ற சல்லிப்பயலின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய சென்னை மாநகர காவல்துறையின் பாரபட்சமான நடவடிக்கையை கண்டித்து செவ்வாயன்று ஆணையர் அலுவலக முற்றுகை அறிவித்திருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. இதை ஜனநாயக மாதர் சங்கம் எப்போதோ கையில் எடுத்திருக்க வேண்டும்.


இது ஒரு விஷயமா என்று கேட்கலாம். ஆனால் ஒரு அரை கிறுக்கன் உருவாக்கிய பீப் சாங் ஒரு விஷயமா ? அதற்கு போராட்டம் நடத்தியதா இல்லையா ஜனநாயக மாதர் சங்கம் ? மார்க்சிஸ்ட் கட்சியின் தீவிர உறுப்பினர்களே மாதர் சங்கத்தை இவ்விவகாரத்தில் விமர்சிக்கத் தொடங்கியபின்தான் கட்சி களத்தில் இறங்கியுள்ளது. பொது வெளியில் எழுதும் பெண்கள், குறிப்பாக, சங்கிகளையும், வலதுசாரிகளையும் விமர்சித்து எழுதும் பெண்கள் மீதான தாக்குதல் சமீப காலங்களில் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக மோடியையும், பிஜேபியையும் விமர்சிப்போர் கடும் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.


இத்தகைய தாக்குதல்கள் தமிழக தேர்தல் நெருங்க நெருங்க அதிகரித்து வருகிறது. இந்த கிஷோர் என்ற நபர், சங்கிகளுக்கு மட்டுமல்ல, ஆளும் வர்க்கத்தினரின் அடியாளாக இருந்து வருகிறார். அதிமுக, காங்கிரஸ், டிடிவி.தினகரன், மீண்டும் அதிமுக, இப்போது பிஜேபி என்று கிஷோர் வாய் வைக்காத இடமே இல்லை. மூன்று முறை கிஷோர் கைது செய்யப்பட்டு, எஸ்.பி.வேலுமணியின் தலையீட்டால் மட்டுமே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது பலரும் அறியாத செய்தி. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கிஷோர் எழுதிய பதிவுகளையெல்லாம் காண்பித்தபோது, அவர் உடனடியாக கைது செய்யுங்கள் என்றுதான் இரண்டு முறை உத்தரவிட்டுள்ளார்.


இரண்டு முறையும் வேலுமணி தலையிட்டு தடுத்துள்ளார். இதில் இரண்டு விவகாரங்களை கவனிக்க வேண்டும். ஒன்று, கிஷோர் போன்ற சல்லிப்பயலை எதற்காக வேலுமணி ஆதரிக்கிறார் என்பது. இரண்டாவது, ஒரு மனப்பிறழ்வு கொண்ட சமூகவிரோதியைக் கூட கைது செய்யமுடியாத ஒரு கையறு நிலையில்தான் முதல்வர் இருக்கிறார் என்பது. முதல்வர் பழனிச்சாமி ஊழல் செய்கிறாரா ? ஆம். சம்பந்தி பெயரில் வளைத்து வளைத்து சம்பாதிக்கிறாரா ? ஆம். ஆனால் இப்படிப்பட்ட சமூக விரோதிகளை அவர் ஆதரிக்கிறாரா என்றால் இல்லை என்று உறுதியாக சொல்லுவேன். கிஷோர் தொடர்ந்து காப்பாற்றப்படுவதில் முதல்வரின் பங்கு துளியும் இல்லை என்பதை அறுதியிட்டு சொல்கிறேன்.


அவன் தொடர்ந்து காப்பாற்றப்படுவது வேலுமணியால் மட்டுமே. சல்லிப்பயலுக்கெல்லாம் குரல் கொடுக்கும் வேலுமணி, தன்னைப்பற்றி ஒரு சிங்கிள் காலம் செய்தி வெளிவந்தால் கூட செய்தி வெளியிட்டவனை கைது செய்ய உத்தரவிடும் வேலுமணி இப்படிப்பட்ட சல்லிப்பயலை ஏன் தொடர்ந்து ஆதரிக்கிறார் என்பது எனக்கு இன்றும் புரியவில்லை. நிற்க. இப்படி சல்லிப்பயலுக்கு குரல் கொடுக்கும் வேலுமணி, அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன், வேலுமணி மீது தொடர்ந்து ஊழல் புகார் அளித்ததை வேடிக்கையா பார்த்துக் கொண்டிருப்பார் ? ஜெயராமனை கைது செய்தே ஆக வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு வேலுமணி கொடுத்த அழுத்தம் கொஞ்ச நஞ்சமல்ல. மனசாட்சி உள்ள மூத்த அதிகாரிகள், அறப்போர் ஜெயராமனைப் போல ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்போரை பொய் வழக்கில் கைது செய்வது, நேர்மையற்ற செயல். அப்படி செய்தால், சமுதாயத்தில் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க ஒருவருமே இல்லாமல் போய் விடுவார்கள் என்று மறுத்த காரணத்தாலேயே ஜெயராமன் கைது செய்யப்படவில்லை.


இல்லையென்றால் ஜெயராமன் கைது செய்யப்படுவதோடு, குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டிருப்பார். ஒரு கட்டத்தில், ஒரு மூத்த அதிகாரி, “நான் ஜெயராமனை கைது செய்யமாட்டேன். வேண்டுமென்றால், என்னை மாற்றி விடுங்கள்” என்று சொன்ன பிறகே வேலுபாய் பின்வாங்கினார். என்னை கைது செய்ய வேண்டும் என்றும் வேலுபாய் பல முறை அழுத்தங்களை கொடுத்திருக்கிறார். இவனை கைது செஞ்சா, வெளிய வந்து இதை விட மோசமா எழுதுவான். உங்களை பற்றி மட்டுமல்ல. கைதுக்கு உத்தரவிட்ட என்னையும் எழுதுவான் என்று, சென்னை, கோவையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் சொன்ன பிறகே வேலுபாய் அமைதியாகி உள்ளார்.


இரு நாட்களுக்கு முன்னர் அனுமன் சேனா என்ற குரங்கு கூட்டம் “மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி, முருங்கைக்கீரை மற்றும் கருவாட்டுக் குழம்பு படையல் போடுங்கள்” என்று தமிழிசைக்கு போட்ட ட்வீட்டை எடுத்து, “இந்துக்களின் மன உணர்வை புண்படுத்திவிட்டேன்” என்று புகார் கொடுக்கப்பட்டது. இது போல காவல்துறையில் ஒரு நாளைக்கு 100 புகார்கள் கொடுக்கப்படும்.


அதில் ஏதாவது, அதிமுகவின் நாளேடான நமது அம்மாவில் செய்தியாக வந்திருக்கிறதா ? “திமுகவை சேர்ந்த சவுக்கு சங்கர் மீது புகார்” என்று நமது அம்மாவில் எதற்கு ஆறு கால செய்தி வர வேண்டும் ? ஏனென்றால், நமது அம்மா நாளேட்டை நிர்வகிப்பவர், வேலுமணியின் அண்ணன் இன்று சமூக ஊடகங்களில் அரசுக்கு, குறிப்பாக மத்திய அரசுக்கும், பிஜேபிக்கு எதிராக எழுதும் பெண்களின் மீது ஆபாசமான தாக்குதல்கள் நடைபெறுவது மிக மிக ஆபத்தானது. எல்லா பெண்களாலும் தோழர் சுந்தரவள்ளியைப் போல இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது. பலர் முடங்கி விடுவார்கள். குலைந்துவிடுவார்கள்.


ஒரு சில பெண்கள் உறுதியோடு இதை எதிர்கொள்ளலாம் என்று முடிவிடுத்தால் கூட, அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் இதை அனுமதிப்பார்களா ? கடைசியில், வேறு வழியே இன்றி, சமூகவலைத்தளங்களுக்கே அப்பெண்கள் முழுக்கு போட்டு விலகும் சூழல்தான் ஏற்படும். இதை நாம் அனுமதிக்கலாமா ? இது மிக மிக ஆபத்தானது. பாசிசத்துக்கு எதிரான ஒவ்வொரு குரலும் நமக்கு முக்கியம்.


அவதூறுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது நமது கடமை. பொறுக்கிகளுக்கு பாதுகாப்பளிக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஆட்சி முடிய இன்னும் 8 மாதங்களே உள்ளது. சவுக்கு சங்கர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)