சென்னை: மது வாங்க பணம் இல்லாததால் சிசிடிவி கேமராக்களைத் திருடி வந்தவர் கைது

சென்னை சிட்லபாக்கம் அடுத்த அஸ்தினாபுரம் பகுதியில் மதுவாங்க பணம் இல்லாததால் சிசிடிவி கேமராக்களைத் திருடி வந்தவர் கைது செய்யப்பட்டார்.


அஸ்தினாபுரம் பகுதியில் கடந்த 4 மாதங்களாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை மட்டும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.


இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சிட்லபாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிசிடிவி கேமராக்களைத் திருடியது திரு.வி.க நகரைச் சேர்ந்த தங்கராஜ் எனத் தெரியவந்தது.


இதனை அடுத்து அவரைக் கைது செய்து விசாரித்ததில் குடிக்க பணம் இல்லாததால் சிசிடிவி கேமராக்களைத் திருடியதாகக் கூறியுள்ளார். இதனை அடுத்து அவரிடம் இருந்து 3 சிசிடிவி கேமராக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.