தேசியக் கொடியை ஏற்றுவதில் திமுக, அதிமுக இடையே தகராறு

ஆரணி அருகே அரசுப் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றுவதில் திமுக மற்றும் அதிமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது.


விழாவில், தேசியக் கொடியை ஏற்றி வைக்க திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஷர்மிளா தரணி சென்றுள்ளார். இதற்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த சம்பத் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்தான் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் எனக் கூறினர்.


இதனால், திமுக மற்றும் அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையறிந்த ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.பின்னர், தலைமை ஆசிரியை மீனாட்சி, தேசியக் கொடி ஏற்றுவது என முடிவானது. இதையடுத்து, தேசியக் கொடியை தலைமை ஆசிரியை மீனாட்சி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!