திருவள்ளூர் மாவட்ட பொன்னேரியில் 7 வயது சிறுமியின் முயற்சியால் பள்ளிக்கூடம் தூய்மை செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய பொன்னேரி தொடக்கப்பள்ளியில் 71 மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில், இந்தப் பள்ளிக்கு என்று 1964-ம் ஆண்டு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் இருந்து 20 சென்ட் நிலம் ஒதுக்கியிருந்தனர்.


இந்த நிலத்தில் தற்போது வெறும் எட்டு சென்ட் மட்டுமே பள்ளியின் வசம் உள்ளது. பள்ளியில் தலைமையாசிரியர் சீதாலட்சுமி 3 ஆசிரியர்கள் என பணியாற்றி வரும் நிலையில் பள்ளிக்கு முறையான கட்டிடம் இல்லை. பள்ளியருகே குப்பை கொட்டப்படுகிறது.


புதிய வகுப்பறை கட்டடம், விளையாட்டு மைதானம் வேண்டுமென்று மாணவி தரப்பில் அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது.


இந்நிலையில் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி பள்ளிக்கு தேவையான கட்டிட வசதியை ஏற்படுத்தி தருவதுடன் சுற்றுச்சுவர் முறையாக அளவீடு செய்து கட்ட வேண்டும் என்றும் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.


இந்த நிலையில் எந்த ஒரு அளவீடும் செய்யாமல் ஆறடி உயர சுவர், 60 அடி நீளத்திற்கு ஒரே நாளில் கட்டி முடிக்கப்பட்டதாக தெரிகிறது. அதேபோல், பள்ளிக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!