தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த புலனாய்வுக்கான விருது - மத்திய அரசு அறிவிப்பு

2020ம் ஆண்டின் சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 6 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


குற்ற வழக்குகளை சிறப்பாக புலனாய்வு செய்யும் காவலர்களுக்கு 2018ம் ஆண்டு முதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் விருது வழங்கப்படுகிறது. இந்தநிலையில் இந்தாண்டுக்கான விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து 121 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இதில் தமிழகத்தை சேர்ந்த பெண் காவல் ஆய்வாளர்கள் ஜான்சிராணி, சந்திர கலா, கலா, கவிதா, பொன்னம்மாள் மற்றும் வினோத்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.