"போலீசார் எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள் என்பது எனக்கு தெரியும்" -டிஜிபி திரிபாதி


தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியன் புகைப்படத்திற்கு நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் தமிழக டிஜிபி திரிபாதி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "காவலர்கள் இறந்தால் இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் ஏதுமில்லை வழக்குகள், சம்பவங்களின் வேறுபாடு அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படுகிறது. போலீசாருக்கு பாதுகாப்பு இல்லாமல் இல்லை. எதிர்பாராதவிதமாக நடைபெற்றது இதனால் போலீசாருக்கு பாதுகாப்பில்லை எனக் கூற முடியாது.


இதுபோன்ற ஒரு சில சம்பவங்களால் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்ததாக அர்த்தமில்லை. எங்கள் குடும்பத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்று விட்டது. போலீசார் எவ்வளவு கஷ்டப் படுகிறாள் என்பது எனக்கு தெரியும். குறை சொல்பவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். நாம் நமது வேலையை செய்வோம் போலீஸருக்கு தகுந்த பாதுகாப்பு இருக்கிறது. இன்னும் பாதுகாப்பு பயிற்சிகளை அளிக்க வேண்டும்" என தெரிவித்தார்.