யூடியூப் விமர்சகர் மாரிதாஸ் மதுரை வீட்டில் போலீசார் 5 மணிநேரம் சோதனை

மதுரை: யூ டியூப் விமர்சகர் மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபர் கிரைம் போலீசார் நேற்று 5 மணிநேரம் சோதனை நடத்தினர்.


நியூஸ்18 தமிழ்நாடு டிவி சேனல் நிறுவனம் தொடர்பாக யூ டியூப் சேனலில் விமர்சனங்களை முன்வைத்திருந்தார் மாரிதாஸ். இது தொடர்பாக பொய்யான தகவல்களை மாரிதாஸ் வெளியிட்டதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


இந்த நிலையில் மதுரையில் உள்ள மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபர் கிரைம் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். மதுரை சூர்யா நகரில் உள்ள மாரிதாஸ் வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சுமார் 5 மணிநேரம் இந்த சோதனை நடத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு