மாவட்ட எல்லைகளைக் கடக்க இ-பாஸ் கட்டாயம் தேவை: போலீஸார் அறிவிப்பு

மாவட்ட எல்லைகளை கடந்து செல்ல இ-பாஸ் கட்டாயம் தேவைஎன்று போலீஸார் தெரிவித்துள் ளனர். கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.


திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய 3 காரணங்களுக்காகவும் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதற்கிடையே இ-பாஸ் நடைமுறைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், நாளை (17-ம் தேதி) முதல் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாஸ்வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து பலர் இ-பாஸ் இல்லாமல் மாவட்ட எல்லைகளை கடந்து செல்ல முற்பட்டனர்.


மாவட்ட எல்லைகளில் சோதனை நடத்தி வரும் போலீஸார், இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை தடுத்து நிறுத்திதிருப்பி அனுப்பி வருகின்றனர். ‘‘இ-பாஸ்-க்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்றுதான் முதல்வர் கூறியிருக்கிறார். இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என்று கூறவில்லை.


எனவே, சாலைகளில் வாகனங்களில் மாவட்ட எல்லைகளை கடந்து செல்ல நினைப்பவர்கள் கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.