கிறிஸ்தவ மணமகனுக்கும், இஸ்லாமிய மணமகளுக்கும் இந்து முறைப்படி திருமணம்

திருப்பதியில் கிறிஸ்தவ மணமகனுக்கும், இஸ்லாமிய மணமகளுக்கும் இந்து முறைப்படி மேளதாளம் முழங்க, தாலிகட்டி திருமணம் நடைபெற்றது.


தெலுங்கானாமாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள வண்ணாரு கூடத்தை சேர்ந்தவர் அனில்குமார். கிறிஸ்தவரான அனில்குமாரும் கம்மம் மாவட்டத்தில் உள்ள கொல்லகூடத்தில் வசிக்கும் இஸ்லாமிய பெண் ஷேக் சோனியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.


ஆனால் அவர்களுடைய காதலுக்கு பெண்ணின் குடும்பத்தார் தடை போட்டனர். காதலன் குடும்பத்தார் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தனர். பெண் தரப்பு ஒப்பு கொள்ளாததால் திருமணம் நடைபெறாமலே இருந்தது.


இந்த நிலையில் கொல்லகூடத்தில் வசிக்கும் இந்துக்கள் ஒன்று சேர்ந்து ஷேக் சோனி பெற்றோரிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் பெற்றனர்.