வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலருக்கு 480 காவல்நிலையங்களில் மலர்தூவி மரியாதை!!


வெடிகுண்டு வீசப்பட்டு உயிரிழந்த காவலர் சுப்பிரமணியனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தென்மாவட்டங்களில் உள்ள 480 காவல்நிலையங்களிலும் அவரது புகைப்படத்தை வைத்து காவல்துறையினர் மரியாதை செலுத்தினர்.


தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வனப்பகுதியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி துரைமுத்து என்பவர் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.


இதையடுத்து அங்கு ரவுடியை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது போலீஸார் மீது ரவுடி தரப்பிலிருந்து நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இந்த தாக்குதலில் காவலர் சுப்பிரமணியம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். 


இந்நிலையில் காவலர் சுப்பிரமணியனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தென்மாவட்டங்களில் உள்ள 480 காவல்நிலையங்களிலும் அவரது புகைப்படத்தை வைத்து காவல்துறையினர் மரியாதை செலுத்தினர்