வாகன, ஓட்டுநர் உரிமங்களின் காலாவதி டிச.31 வரை நீட்டிப்பு

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஆகஸ்டு 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஓட்டுநர் உரிமம், தகுதிச் சான்றிதழ், வாகனப் பதிவுச் சான்றிதழ் போன்றவற்றை புதுப்பிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.


இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலத்தை, டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.


சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதை கவனத்தில் கொள்ளுமாறும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.