சென்னை அருகே கொடூரம் - டிவி தலையில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் வதித்து வருவர் பாலாஜி. இவருடைய மகன் கவியரசு. 3 வயதான கவியரசு இன்று வீட்டில் விளையாடி கொண்டு இருக்கும்போது வீட்டில் இருந்த டிவி-கவியரசு மீது தவறி விழுந்துள்ளது


அப்போது கவியரசுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் கவியரசின் தந்தை பாலாஜி இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து சேலையூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.


சென்னை அருகே கொடூரம் - டிவி தலையில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 வயது சிறுவன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு