ஊர்க்காவல் படையை சேர்ந்த காவலர் மாரடைப்பால் உயிரிழந்த குடும்பத்திற்கு 2 லட்சம் நிதியுதவி அளிக்கும் மாவட்ட கண்காணிப்பாளர்.

பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த ஊர்காவல்ப்படை காவலர் குடும்பத்திற்கு ரூபாய் 2 லட்சம் உதவித்தொகை வழங்கிய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.


திருநெல்வேலி மாவட்டம் 26.08.2020 வீரவநல்லூர் பகுதியில் கடந்த (10.05.2020) கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட களக்காடு பகுதியை சேர்ந்த ஊர்காவல்படை காவலர் திரு.சுப்பையா அவர்கள் பணிமுடித்து வீடு திரும்பும் போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.


இதனையடுத்து பணியின் போது உயிரிழந்த சுப்பையாவின் குடும்பத்தின் நலனில் அக்கறை கொண்டு, மாவட்ட காவல்துறையின் அனைவரின் பங்களிப்போடு சேகரித்த ரூபாய் 2 லட்சத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் சுப்பையாவின் மனைவி திருமதி. லதா சங்கரி என்பவரிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வழங்கியுள்ளார்.


இந்நிகழ்வின் போது ஊர்காவல்படை துணை வட்டார தளபதி திரு. வினோத் வின்ஸ்டன் ராஜேஷ் அவர்கள் உடனிருந்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா