தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ள ’அம்மா கோவிட்-19' திட்டம் - சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா

இந்தியாவிலேயே முதன்முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்காக அதிநவீன வசதிகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனை, மூச்சுத் திணறலால் உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் பைப்லைனுடன் கூடிய படுக்கைகள், சென்னையில் பிளாஸ்மா வங்கி என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்காக அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. 14 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்கும் நபர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் தமிழக அரசு வழங்க உள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின் மூலம் பல்ஸ் ஆக்ஸிமீட்டர், வெப்பமானி, முகக்கவசங்கள், வைட்டமின் மாத்திரைகள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுவதோடு, காணொலி காட்சி மூலமாக மருத்துவர்கள் ஆலோசனையும் வழங்க உள்ளனர். மேலும், மன நல ஆலோசகர்கள், யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களும் ஆலோசனை வழங்குவர் என்றும், அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுடன் மருத்துவக் குழு தொடர் கண்காணிப்பில் இருக்கும் என்றும், கொரோனா உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் இத்திட்டத்தில் இணைய 2500 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களில் 50 சதவீதம் பேர் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். எனவே அவர்களின் இல்லத்திற்கே சென்று சிகிச்சை வழங்குவதற்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் சென்னையில் தொடங்கி விரைவில் தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்பட உள்ளது.மிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களில் 50 சதவீதம் பேர் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். எனவே அவர்களின் இல்லத்திற்கே சென்று சிகிச்சை வழங்குவதற்காக இந்த திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் சென்னையில் தொடங்கி விரைவில் தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்பட உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு