மன அழுத்தத்தை குறைக் கும் வகையில் போலீசாருக்கு யோகா பயிற்சியை டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கி வைத்தார்..

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கை அமல்படுத்துவதில், போலீசார் தீவிரமாக பணியாற்றுகின்றனர். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகள், தனிமைப்படுத்துதல் முகாம்கள், கட்டுப்பாட்டு பகுதிகள் ஆகியவற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.


இதுமட்டுமின்றி சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு ரோந்து, வாகன போக்குவரத்தை சரிசெய்தல் உள்ளிட்ட வழக்கமான பணிகளையும் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இதனால் போலீசார் மன அழுத்தத்துக்கு உள்ளாவதோடு, உடல்நலனும் கெட்டுப்போகும் வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் வகையில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பணிபுரியும் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்க திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவிட்டார்.


யோகா பயிற்சி அதன்படி திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை போலீசாருக்கு யோகா மற்றும் மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் மற்றும் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர் கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 235 பேர் கலந்து கொண்டனர்.


இவர்களுக்கு 1 மணி நேரம் பல்வேறு யோகா மற்றும் மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவரும் தினமும் பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து டி.ஐ.ஜி. முத்துசாமி கூறுகையில், பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு பொதுமக்களிடம் மரியாதை குறைவாக போலீசார் நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.


இதனை தடுக்கும் வகையில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இதேபோல் கோரோனா நோயில் இருந்து போலீசாரை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு மூச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் நுரையீரல் திறம்பட செயல்பட்டு, கொரோனாவில் பாதிப்பு ஏற்படாமல் போலீசார் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)