பண்ருட்டி அருகே டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு.

பண்ருட்டி அருகே புலவனூரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக செல்வக்குமார் உள்ளார். நேற்று முன்தினம் இரவு மதுபாட்டில்கள் விற்பனை முடிந்ததும், செல்வக்குமார் தனது வீட்டுக்கு சென்று விட்டார்.


நேற்று காலை வந்து பார்த்தபோது, டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவற்றில், ஒருவர் சென்று வரும் வகையில் துளைபோடப்பட்டு இருந்தது. கடையை திறந்து பார்த்தபோது, அங்கிருந்த 24 பீர் பாட்டில்களை காணவில்லை.


நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவற்றில் மர்மநபர்கள் துளையிட்டு, உள்ளே சென்று மதுபாட்டில்களை திருடிச்சென்றது தெரியவந்தது.


இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று, திருட்டு நடந்த டாஸ்மாக் கடையை பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Popular posts
கடலூர் தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்-மீது நடவடிக்கை எடுக்க ஹெல்த் அமைச்சருக்கு கோரிக்கை!
Image
அரக்கோணம் அடுத்த சோகனூர் அருகே அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாக கூறி அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடை நீக்கம்
Image
பாதிரியாரை கைது செய்வதற்கு முன்பு வாடிகன் போப்பிடம் அனுமதி வாங்கனும் : அரசின் நடவடிக்கையை விமர்சிக்கும் அமைச்சரின் மருமகள்..!!
Image
முகக்கவசம் அணியாத நபரை வெளுத்து வாங்கிய எஸ்.ஐ : காவல்துறையினருக்கு எதிராக குவியும் கண்டனம்!!!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image