பெண் வன்கொடுமை சட்டத்தில் போலீஸ் வழக்கு, தலைமறைவாக இருக்கும்- கிஷோர். கே. சாமி கைது செய்யப்பட்டார்-பின்னர் கே ஸ்வாமி விடுவிப்பு...

கிஷோர் கே சாமி, ஆரம்பத்தில் சமூக அக்கறை உள்ள சிலருடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்ட இந்த நபர் பின்னர் அதை பயன்படுத்திக்கொண்டு பிளாக்மெயில் வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.


அதற்கு ஆளுங்கட்சி ஆதரவு தேவை என ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அதிமுகவில் நுழைய முயன்றார் முடியவில்லை. பின்னர் அதிமுக ஆதரவு தகவல்களாக போட்டு முட்டி மோதி பார்த்தார்.


ஆரம்பத்தில் அதிமுக மாசெ ஒருவருக்கு எதிராக பணம் வாங்கிக்கொண்டு கண்டதை எழுத வச்சி வெளுத்துவிட்டார்கள். இதுபோன்று பல இடங்களில் அடி உதை வாங்கி வந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா பொறுப்பில் வந்த நேரம் எப்படியாவது அதிமுகவில் நுழைந்து ஏதாவது பதவி வாங்கிவிடலாம், ஜெயா டிவியில் நுழைந்துவிடலாம் என்று முயற்சி செய்து அது நடக்காத கோபத்தில் பாஜக பக்கம் ஒதுங்கினார்.


சங்கிகளே வியக்கும் வண்ணம் பொய் மூட்டைகளை பிறர் நம்பும் வண்ணம் எழுதுவதும், எச்.ராஜா, எஸ்.வி.சேகருக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் பெண்களை கண்டபடி எழுதுவதிலும் பிடிக்காதவர்களை தீவிரவாதிகள் அளவுக்கு எழுதுவதையும் பார்த்து கிஷோர் கே சாமியை சங்கி கும்பல் ஆதரித்து வருகிறது.


அதை வைத்துக்கொண்டு கண்டபடி எழுதுவது, அடுத்தவர்களை அவதூறு செய்வது எனக்கிளம்பி ஒரு கட்டத்தில் ஊடகத்த்ல் இருக்கும் பெண்களை கண்டபடி அவதூறு செய்வதை வழக்கமாக வைத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார். விளைவு இதுவரை 2 வழக்குகள் அவர்மீது அந்த வழக்கில் கைதாகும் நேரத்தில் அவருக்காக அதிமுக தரப்பிலேயே பெரிய இடத்தில் பேசியதும், பாஜக இளைஞரணி வினோஜ் பி செல்வம், நியூஸ் ஜெ நிர்வாக பொறுப்பில் இருக்கும் விவேக் அன்பரசன், வக்கீல் பாயிண்ட் பாலாஜி போன்றோர் தலையீட்டின் பேரில் தப்பித்தார்.


பின்னர் சிறிது காலம் சும்மா இருந்தவர் மீண்டும் வேலையை ஆரம்பித்தார். தற்காலத்தில் அயோக்கியத்தனம் செய்பவன் ஒரே வேலை மாநிலத்தில், மத்தியில் இருப்பவர்களை ஆதரித்து எழுதினால் போலீஸ் யோசிக்கும் என்கிற அதே டெக்னிக்கை கையில் எடுத்தார். சமீபத்தில் ஜெயா தொலைக்காட்சியில் இருக்கும் ஒரு பெண்ணை பற்றி மிகவும் அவதூறாக எழுத அவர் அளித்த புகாரின்பேரில் அவதூறு செய்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது போலீஸ். தற்போது கிஷோர் கே.சாமி தலைமறைவாக உள்ளார்.


இவருக்காக போலீஸிடம் பேசி கைதாகாமல் இருக்க பலரிடமும் பேசி வருகிறார். வழக்கம்போல் இவருக்காக உதவும் தஞ்சை ஜீவா, வினோஜ் பி செல்வம், நியூஸ் ஜெ நிர்வாக பொறுப்பில் இருக்கும் விவேக் அன்பரசன், எஸ்.வி.சேகர், அதிமுக வக்கீல் பாயிண்ட் பாலாஜி போன்றோர் உதவ தயாராகி வருகிறார்கள்.


இவர் தகவல் களஞ்சியம்போல் சில அமைச்சர்களின் மகன்களிடம் இன்பாக்சில் பேசி நட்பை ஏற்படுத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டவர். திமுகவை அதிகமாக திட்டுவதாலும், உதயநிதியை விமர்சிப்பதாலும் திமுகவுக்கு எதிரான ஆள் என நம்பி சிலர் ஆதரிக்கின்றனர்.


முன்னர் இவருடன் பழகிய பலரையும் காரியம் ஆனவுடன் அவதூறாக எழுதுவதும், இட்டுக்கட்டி எழுதுவதும் இவரது வழக்கம். பாவம் எத்தனை அமைச்சர்களின் பிள்ளைகள் சிக்கப்போகிறார்களோ இந்த வாய் வியாபாரியிடம். பெண்களை தொடர்ந்து அவதூறாக எழுதிவரும் இவரை எஸ்.வி.சேகர் வேண்டுமானால் காப்பாற்ற முயலலாம், மற்றவர்கள் முயலலாமா?


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!