ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகும் எதற்கெல்லாம் தடை தொடரும்; முழு விவரம்..

ஆகஸ்டு 1ம் தேதி முதல் அன்லாக் 3.0 விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இந்த காலகட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக இரவு நேர லாக்டவுன்நடைமுறை முற்றிலுமாக நீக்கப்படுகிறது. இதுவரை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.


அது இனிமேல் இருக்காது. மேலும், உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள் ஆகியவை ஆகஸ்ட் 5ம் தேதி முதல் செயல்படலாம். சமூக இடைவெளி இங்கே பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் சில விஷயங்களுக்கு தடை தொடர்கிறது.


தடை செய்யப்பட்ட சேவைகள் இவைதான்: மெட்ரோ ரயில், சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்கு ஆடிட்டோரியம், அசெம்ப்ளி ஹால் போன்ற பகுதிகள், அதிகமாக மக்கள் கூட்டக் கூடிய சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு கல்வி கலாச்சாரம் மத நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது.


இந்த விஷயங்களுக்கு எப்போது அனுமதி தரலாம் என்பது பற்றி பிறகு முடிவு செய்யப்படும். அதேநேரம் கண்டைன்மெண்ட் மண்டலங்கள் என்று அழைக்கக்கூடிய கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை தளர்வுகள் இன்றி ஊரடங்கு தொடரும்.


ஒரு பக்கம் நாட்டில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் தரவுகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த தளர்வுகள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. இருப்பினும்,


பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, வெளியே செல்லும்போது சானிடைசர் போட்டு கையை துடைப்பது, வீட்டுக்கு வந்ததும் சோப்பு போட்டு கை கழுவுவது, முகக்கவசம் கட்டாயம் அணிவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாகதான் அதை கட்டுப்படுத்த முடியும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)